வாகன சோதனையில் 5.200 கிலோ கஞ்சா பறிமுதல்: வட மாநிலத்தவர் இருவர் கைது

16 July 2021, 11:23 pm
Quick Share

கோவை: கோவை அருகே கஞ்சா கடத்தி வந்த வட மாநிலத்தை சேர்ந்த இரண்டு பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டத்திற்கு எஸ்.பி.யாக செல்வநாகரத்தினம் பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற றார்.அதன் ஒருபகுதியாக எஸ்.பி.செல்வநாகரத்தினத்திற்கு அன்னூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கஞ்சப்பள்ளி அருகே கஞ்சா கடத்தி வரப்படுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையில் 4 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் இன்று அன்னூர் கஞ்சப்பள்ளி செக் போஸ்ட் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.அப்போது,அவ்வழியாக வந்த இருவரை சந்தேகத்தின் பேரில் காவல் நிலையம் அழைத்துச்சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் அவர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பீஷ்வர் சாகு( வயது 29 ),அலோக் நாயக்( வயது 21 ) என்பதும்,சட்டவிரோதமாக 5.200 கிலோ கஞ்சாவினை விற்பனைக்காக வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 5.200 கிலோ கஞ்சா மற்றும் இரு செல்போன்கள் மற்றும் ரூ.5 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.பின்னர்,அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேட்டுப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 15.200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் அன்னூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 5.200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 131

0

0