தல தீபாவளி கொண்டாடும் காவலர்களுக்கு 5 நாட்கள் விடுப்பு

Author: kavin kumar
29 October 2021, 3:54 pm
Quick Share

கோவை: கோவைபுதூரில் உள்ள 4ஆம் அணி பட்டாலியனின் பணிபுரியும் தல தீபாவளி கொண்டாடும் காவலர்களுக்கு 5 நாட்கள் விடுப்பு, பட்டாசுகள், இனிப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் கோவைபுதூரில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை 4ஆம் அணி செயல்பட்டு வருகிறது. இதன் கமெண்டண்ட், அந்த நிலையத்தின் அனைத்து காவலர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், கோவைபுதூரில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை 4 ஆம் அணியின் அனைத்து குழுமங்களிலும் பணிபுரியும் காவலர்களுக்கு தீபாவளி வாழ்த்துகள் சொன்னதுடன், தல தீபாவளி கொண்டாட இருக்கும் காவலர்களுக்கு நவம்பர் 03ஆம் தேதி முதல் 07ஆம் தேதி வரை 5 நாட்கள் விடுப்பு கொடுத்து அனுப்பவும், அவர்களுக்கும் தீபாவளி அன்பளிப்பாக ரூபாய். 200 மதிப்புள்ள பட்டாசுகளும், ரூபாய் 100 மதிப்புள்ள இனிப்பும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அன்பளிப்பை அந்தந்த குழும அலுவலகத்தில் அல்ல்து தலைமை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அந்தந்த அணியின் தளவாய் என சொல்லப்படும் கமெண்டண்ட் நினைத்தால், அவர்களின் அதிகாரத்திற்குட்பட்டு, தங்களுக்கு கீழ் உள்ள நிதியின் மூலம் இவ்வாறு செய்ய முடியும்.

Views: - 166

0

0