பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 5 நபர்கள் கைது

Author: Udayaraman
10 October 2020, 1:31 pm
Quick Share

ஈரோடு: கோபிச்செட்டிப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் பட்டாக்கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 5 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பா.வெள்ளாபாளையம் பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் ஓம்சக்தி நகரை சேர்ந்த காமராஜ் என்பவர் குளித்துக்கொண்டிருந்தார். இவர் அருகில் சந்தேகத்திற்கு இடமான வகையில் பேசிக்கொண்டிருந்த வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்களை குறித்து காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அங்கிருந்து 5நபர்களையும் விசாரித்ததில்,

இவர்கள் சென்னை நங்கநல்லூர் பகுதியை சேர்ந்த சத்தியநாராயணன் மற்றும் சீதாராமன், மடிப்பாக்கத்தை சேர்ந்த ராமசந்திரன், பழைய பல்லாவரத்தை சேர்ந்த சுடலைராஜா மற்றும் மேடவாக்கத்தை சேர்ந்த மணிகண்டன் என்பதும், இவர்கள் பட்டகத்தி மற்றும் வீச்சருவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்திருப்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து இவர்கள் 5 நபர்களையும் கைது செய்து விசாரணை நடத்தியதில்,

கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் கொள்ளையில் ஈடுபட திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. மேலும் இவர்களிடம் இருந்து பட்டாக்கத்தி அரிவாள் ஆயுதங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

Views: - 28

0

0