தனியாருக்கு சொந்தமான இடத்திலிருந்து சவுடு மண் அள்ளிய 5 பேர் கைது

Author: Udhayakumar Raman
17 September 2021, 3:57 pm
Quick Share

காஞ்சிபுரம்: தனியாருக்கு சொந்தமான இடத்திலிருந்து சவுடு மண் அள்ளிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் திருட்டுத்தனமாக சவுடு மண் எடுக்கப்படுவதாக ஆர்.டி.ஓ மற்றும் குன்றத்தூர் இன்ஸ்பெக்டருக்கு செல்போன் மூலம் தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அந்த சோதனையில் பெரிய லாரிகளில் திருட்டுத்தனமாக சவுடு மண் அள்ளி கொண்டிருப்பது உறுதியானது. இதனையடுத்து லாரியில் மணல் அள்ளி கொண்டவர்கள் அதிகாரிகளை கண்டதும் அங்கிருந்து தப்பியோட முயற்சி செய்தனர்.

ஆனால் காவல்துறையினர் சிலரை மட்டுமே மடக்கி பிடித்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் குன்றத்தூர் பகுதியில் வசித்து வரும் கமல், உசேன், சீனிவாசன், சக்தி, பிரபா ஆகிய 5 பேர் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் இது பற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்து 5 லாரிகள், 2 பொக்லைன் இயந்திரங்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அனுமதி இல்லாமல் தனியாருக்கு சொந்தமான இடத்திலிருந்து மணல் அள்ளியது யார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 98

0

0