துபாயில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு கடத்தி வரப்பட்ட 56 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

19 November 2020, 10:19 pm
Quick Share

மதுரை: துபாயிலிருந்து மதுரைக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் மதுரை வந்த பயணிகளிடம் ரூ.56 லட்சத்து 58 ஆயிரம் மதிப்புள்ள தங்க கட்டிகளை சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

மதுரை விமான நிலையத்தில் உள்ள சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு வந்த ரகசிய தகவலையடுத்து மத்திய சுங்க இலகா நுண்ணறிவு பிரிவினர் வெளி நாட்டில் இருந்து வரும் விமான பயணிகளிடம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். துபாயிலிருந்து மதுரைக்கு ஏர் இந்தியா விமானத்தில் வந்த பயணிகளிடம் தீவிர சோதனை மேற்கொண்ட போது சந்தேகப்படும்படியான இருவரின் உடமைகளை சோதனை செய்தனர்.

அவர்கள் உடைமைகளில் களிமண் கட்டிகளில் மறைத்து தங்க கடத்தி வந்தது தெரியவந்தது. கடத்தி வரப்பட்ட தங்க கட்டிகளின் மதிப்பு ரூ.56,58,647 ஆகும். இதனையடுத்து அவரிடமிருந்து தங்க கட்டிகளை சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் கைப்பற்றினர். மேலும் சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் தங்கம் கடத்தி வந்த இருவரையும் கைது செய்தனர்.

Views: - 21

0

0