சாலைமறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட 560 விவசாயிகள் கைது

25 September 2020, 3:48 pm
Quick Share

விருதுநகர்: வேளாண் திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி விருதுநகர் மாவட்டம் முழுவதும் நடை பெற்ற சாலைமறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட 560 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நாடாளுமன்ற இரு அவைகளிலும் வேளாண் திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்தது. இந்த மசோதாவால் நாட்டில் உள்ள விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்திக்கக் கூடும் என தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் விருதுநகர் சாத்தூர் சிவகாசி ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற பகுதியில் விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்த மசோதாவைக் கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியலின் போது விவசாயிகள் மத்திய மாநில அரசுகளுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர். பின்னர் காவல் துறையினர் கைது செய்ய வந்த போது விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது . இதனால் மாவட்டத்தில் 8 க்கும் மேற்ப்பட்ட இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது . பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 560 க்கும் மேற்பட்ட விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

Views: - 3

0

0