16 ஆயிரத்தை கடந்த புதுச்சேரி… ஒரே நாளில் 20 பேர் உயிரிழப்பு…

4 September 2020, 3:57 pm
corona virus new - updatenews360
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்றால் முதன் முறையாக கடந்த 24 மணி நேரத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். அதே போல் இதுவரை இல்லாத அளவில் 591 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்

உலக நாடுகளை விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ். 200 நாடுகளில் இன்னமும் கடுமையான பாதிப்பு இருக்கிறது. அதிகமான கொரோனா தொற்றுகள் அமெரிக்காவில் பதிவாகி உள்ளது. பிரேசிலும் கொரோனா தாக்கத்தில் இருந்து தப்பவில்லை. இந்தியாவிலும் கடுமையான பாதிப்பு உள்ளது. தென்னிந்தியாவை பொறுத்தவரை தமிழகத்தில் தான் அதிக பாதிப்பு. தொற்றுகள் அதிகம் பதிவாகும் அதே நேரத்தில் குணம் பெற்றவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.

இந்நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்றால் முதன் முறையாக கடந்த 24 மணி நேரத்தில் 20 நபர்கள் உயிரழந்துள்ளனர். அதே போல் இதுவரை இல்லாத அளவில் 591 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் புதுச்சேரியில் 525 நபர்களுக்கும், காரைக்காலில் 18 நபர்களுக்கும், ஏனாமில் 44 நபர்களுக்கும், மாஹேவில் 4 நபர்களுக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 5,218 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 10,674 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாநிலத்தில் இதுவே முதல் முறையாக கடந்த 24 மணி நேரத்தில் 20 நபர்கள் உயிரிழந்துள்ளனர். அதில் புதுச்சேரியில் 17 நபர்களும், காரைக்காலில் 1 நபரும், ஏனாமில் 2 நபர்களும் உயிரிழந்ததை அடுத்து மாநிலத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 280ஆக உயர்ந்துள்ளது. தற்போது புதுச்சேரி மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 16,172 ஆக உயர்ந்துள்ளது.

Views: - 0

0

0