சாதி சான்றிதழ் வழங்க வலியுறுத்தி 5வது நாளாக கரும்பு கொடி ஏந்தி போராட்டம்

21 November 2020, 1:33 pm
Quick Share

திருப்பத்தூர்: புதூர் நாடு, நெல்லிவாசல் நாடு, புங்கம்பட்டுநாடு கிராமத்தில் சாதி சான்றிதழ் வழங்க வலியுறுத்தி ஐந்தாவது நாளாக கரும்பு கொடி ஏந்தி கிராம நிர்வாக அலுவலகம் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.‌

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜவ்வாது மலை பகுதியிலுள்ள புதூர் நாடு, நெல்லிவாசல் நாடு, புங்கம்பட்டு நாடு போன்ற ஊராட்சி பகுதிகளில் வாழும் மலைவாழ் மக்கள் தங்களுக்கு கடந்த இரண்டு வருடங்களாக முறையான எஸ்டி சாதி சான்றிதழ் வழங்க வலியுறுத்தி கடந்த திங்கட்கிழமை முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று ஐந்தாவது நாளாக கருப்புக்கொடி ஏந்தி அஃதே பகுதிகளிலுள்ள கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0