செங்குன்றத்தில் ஆட்கடத்தலில் ஈடுபட்ட 6 பேர் கைது: 3 நாட்டு வெடிகுண்டுகள், கைத்துப்பாக்கி, பட்டா கத்திகள் பறிமுதல்….

Author: kavin kumar
31 October 2021, 2:56 pm
Quick Share

சென்னை: செங்குன்றத்தில் ஆட்கடத்தலில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த 3 நாட்டு வெடிகுண்டுகள், கைத்துப்பாக்கி, பட்டா கத்திகளை பறிமுதல் செய்தனர்.

சென்னை செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் என்கிற ராஜா. இவர் செங்குன்றம் அடுத்த விஜயநல்லூர் பகுதியில் அரசு அனுமதியின்றி சூதாட்ட கிளப் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. கடந்த 15 ஆம் தேதி ஒரு கும்பல் ராஜாவை காரில் கடத்தி சென்று ஒரு லட்சம் கேட்டு பின்னர் தான் வைத்திருந்த 20 ஆயிரம் ரூபாயை பறித்துக்கொண்டு விடுவித்தாக ராஜா செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்திச் சென்ற மர்ம கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து சம்பவ இடங்களிலுள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை வைத்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.

புழல் மாதனாங்குப்பம் பகுதியில் சிலர் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தனிப்படை போலீசார் அங்கு சென்று அங்கிருந்த ஆறு நபர்களை பிடித்தனர். பின் அங்கிருந்த 3 நாட்டு வெடிகுண்டு, ஒரு கைத்துப்பாக்கி, 4 பட்டா கத்திகள் பறிமுதல் செய்து செங்குன்றம் காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் பிரபல ரவுடி செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த சேது, அவனது கூட்டாளிகள் ராகுல், வினோத், ஜான்சன், செல்லப்பன், விஜய் ஆகியோர் என்பதும் ஆட்கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதும் இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது.

Views: - 245

0

0