காட்டன் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 3 பெண்கள் உள்ளிட்ட 7 பேர் கைது

19 September 2020, 6:49 pm
Quick Share

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி பகுதியில் சட்டவிரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட காட்டன் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த மூன்று பெண்கள் உள்ளிட்ட 7 பேரை சிறப்பு தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பஜாரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட காட்டன் லாட்டரி சீட்டுகளை
விற்பனை செய்வதால் பல ஏழை தொழிலாளர்கள் தங்கள் பணத்தை சூதாட்டத்தில் இழந்து வறுமையில் வாடுவதாகவும், காட்டன் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்பவர்களை கைது செய்து உரியநடவடிக்கை எடுக்க கோரி ஹலோ போலீஸ் வாட்ஸ் அப் எண் 9003390050 மூலம் புகார் தெரிவித்ததைதொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் உத்தரவில் சிறப்பு தனிப்படை காவல் உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திரன், கதிரேசன் ஆகியோர் தலைமையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு காட்டன் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட விஜயகுமார், தனபால், கோவிந்தசாமி, குண்டு துரை, விஜியா, செல்வி, பாசம் உள்ளிட்ட 7 பேரை கைது செய்து 8,750 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மூன்று பெண்கள் உள்ளிட்ட7 பேரையும் கும்மிடிபூண்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காட்டன் லாட்டரியின் அமோக விற்பனையை கும்மிடிபூண்டி காவல்துறையினர் கண்டு கொள்ளாத நிலையில் சிறப்பு தனிப்படை போலீசார் 7 பேரை கைது செய்துள்ள சம்பவம் பொதுமக்களின் பாராட்டுக்களை பெற்றுள்ளது.