கோவில் பூட்டை உடைத்து 7 பவுன் நகைகள் திருட்டு

22 November 2020, 3:03 pm
Quick Share

திருப்பூர்: தாராபுரம் அருகே கடப்பாறை உபயோகபடுத்தி கோவில் பூட்டை உடைத்து 7 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடிப்படையில் குற்றப்பிரிவு காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்துள்ள மணக்கடவு அருகே காட்டம்பட்டி கிராமத்தில் சுமார் 500 குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர். இங்கு பிரசித்தி காவல் தெய்வமாக காளியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் நேற்று இரவு கோவிலில் ஒரு மர்ம நபர் லுங்கி வேஷ்டி அணிந்து இரும்பு கடப்பாரையை உபயோகப்படுத்தி அங்குள்ள இரண்டு பூட்டுகளை உடைத்து உள்ளே சென்று கோவிலில் உள்ள அம்மன் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் நகைகள் கொள்ளை அடித்து சென்றனர்.

இந்த சம்பவம் கோவிலில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் கொள்ளையடித்து சென்றது பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கொள்ளை சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட கிராமவாசிகள் கூறுகையில் காட்டம்பட்டி சுற்றுப்பகுதிகளில் தொடர்ந்து ஆடுகள் திருடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்தப் கண்காணிப்பு கேமரா பதிவியின் அடிப்படையில் தாராபுரம் குற்றப்பிரிவு காவல்துறை சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி அங்குள்ள பொதுமக்களிடம் இது குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது.

Views: - 0

0

0