சாவு வீட்டில் 70 பவுன் நகை 2 கிலோ வெள்ளி கொள்ளை

23 November 2020, 3:46 pm
Quick Share

தஞ்சை: இறந்த விவசாயியை இறுதிச்சடங்கிற்கு சொந்த ஊருக்கு எடுத்துச் சென்ற நிலையில் தஞ்சையில் உள்ள வீட்டில் 70 சவரன் நகை 2 கிலோ வெள்ளி கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர் புதுக்கோட்டை சாலையில் உள்ள சுந்தரம் நகரை சேர்ந்தவர் வைத்தியலிங்கம். விவசாயி கடந்த 31ஆம் தேதி உடல்நிலை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இறந்துவிட்டார். இவரது உடலை சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிக்கு உறவினர்கள் எடுத்துச் சென்றனர்.
அதனைத் தொடர்ந்து 22ஆம் தேதி இரவு வீட்டிற்கு வந்த அவரது மனைவி சரஸ்வதி மற்றும் உறவினர்கள் வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

வீட்டில் உள் அறையில் இருந்த 4 பீரோ களை உடைத்து அதில் இருந்த 70 பவுன் நகை மற்றும் 2 கிலோ வெள்ளி ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது. இதனையடுத்து தஞ்சை தமிழ் பல்கலைக்கழக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு காவல்துறையினர் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களும் கொள்ளை அடிக்கப்பட்ட வீட்டிற்கு வந்து விசாரணை செய்து வருகின்றனர். வீட்டின் உரிமையாளர் இறந்த நிலையில் அவரது வீட்டில் கொள்ளை அடிக்கப்பட்டது தஞ்சைப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 0

0

0