காந்தியடிகளின் 73 வது நினைவு தினம் : உறுதிமொழி ஏற்ற அரசு அலுவலர்கள்

29 January 2021, 3:13 pm
Quick Share

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மகாத்மா காந்தியடிகளின் 73 வது நினைவு தினத்தையொட்டி ஆட்சியர் தலைமையில் அரசு அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மகாத்மா காந்தியடிகளின் 73 வது நினைவு தினத்தையொட்டி மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் அவர்கள் தலைமையில் அனைத்து அரசு துறை அலுவலர்கள் தீண்டாமை ஒழிப்பு மற்றும் தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பின்னர் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Views: - 0

0

0