73-வது குடியரசு தினம்: தேசிய கொடி ஏற்றி மாவட்ட ஆட்சியர் மரியாதை!

Author: kavin kumar
26 January 2022, 1:52 pm
Quick Share

தருமபுரி : 73-வது குடியரசு தினவிழாவையொட்டி இன்று தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி தேசிய கொடியினை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணி வகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டார்கள்.

இந்தியாவின் 73 வது குடியரசு தினவிழாவையொட்டி தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து, தருமபுரி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 27 காவலர்களுக்கு 2022 - ஆம் ஆண்டிற்கான தமிழக முதல்வரின் காவலர் பதக்கங்களையும், வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, 

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, பேரூராட்சிகள் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊராட்சித்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 50 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றிய 39 மருத்துவர்களுக்கும்,

உள்ளாட்சி அமைப்புகளில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றிய 12 தூய்மை பணியாளர்களுக்கும் என மொத்தம் 101 நபர்களுக்கு நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திவ்யதர்சினி வழங்கினார். கொரோனா தொற்று காரணமாக ஒவ்வொரு ஆண்டும் நடைபெரும் கலை நிகழ்சிகள் இல்லாமல் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. மாவட்டத்தில் குடியரசு தினவிழா மற்றும் சுதந்திர தினவிழாகளில் நடைபெரும் சிறப்பு கிராம சபை கூட்டங்களுக்கும் தடை விதிக்கபட்டதால் இந்த குடியரசு தினவிழா கலையிழந்து காணப்பட்டது.

Views: - 861

0

0