76 மாணவர்கள் தொடர்ச்சியாக ஒன்றரை மணி நேரம் சிலம்பம் சுற்றும் சாதனை நிகழ்ச்சி

Author: Udhayakumar Raman
24 July 2021, 1:26 pm
Quick Share

திண்டுக்கல்: ஆத்தூர் அருகே முன்கள பணியாளர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும், தடுப்பூசியின் முக்கியத்துவத்தினை உணர்த்தும் விதமாகவும், உலக சாதனைக்காக 76 மாணவர்கள் தொடர்ச்சியாக ஒன்றரை மணி நேரம் சிலம்பம் சுற்றும் சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுக்காவிற்கு உட்பட்ட வீரக்கல் ஊராட்சி வண்ணம்பட்டி கிராமத்தில் உலக சாதனைக்காக 70 மாணவர்கள் தொடர்ச்சியாக ஒன்றரை மணி நேரம் சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்கள பணியாளர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் தடுப்பூசியின் முக்கியத்துவத்தினை உணர்த்தும் விதமாகவும் இந்த சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. வனம் நேச்சுரல்ஸ், ஸீ அறக்கட்டளை மற்றம் அமேஸிங் ஸ்போர்ட்ஸ் அகாடமி இணைந்து நடத்தும்

இந்த சாதனை நிகழ்ச்சியை சிலம்ப ஆசான் செந்தில்குமார் ஒருங்கிணைப்பில், ஆஸ்கார் உலக சாதனை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் கதிரவன் முன்னிலையில், வண்ணம்பட்டி பங்கு தந்தை சாலமோன் தலைமையில் நடைபெற்றது. வண்ணம்பட்டி, வீரக்கல், ஆத்தூர், முள்ளிபாடி, பெரியகுளம், தேனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 76 மாணவர்கள் மற்றும் சிலம்ப ஆசான்கள் கலந்து கொண்டு சாதனை நிகழ்ச்சி படைத்தனர். பின்னர் ஆஸ்கார் உலக சாதனை நிறுவனம் மாணவர்களுக்கு உலக சாதனை புரிந்தவர்களுக்கான சான்றிதழை வழங்கினர்.

Views: - 116

0

0