ஆந்திராவுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த 8. 50 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்

By: Udayaraman
11 October 2020, 10:56 pm
Quick Share

வேலூர்: சேண்பாக்கத்தில் மின்வாரிய அலுவலகம் அருகில் ஆந்திராவுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த 8. 50 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

வேலூர் மாவட்டம்,சேண்பாக்கத்தில் ஆந்திரமாநிலத்துக்கு கடத்துவதற்காக மின்வாரிய அலுவலகம் அருகில் ஒரு காலி இடத்தில் ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட வழங்கல் அலுவலர் பானுவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் பறக்கும் படையினர் மற்றும் வட்ட வழங்கல் துறையினர் சேண்பாக்கத்தில் அந்த இடத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு கடத்தப்படுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த எட்டரை டன் ரேஷன் அரிசி மூட்டைகளை கைப்பற்றி அவைகளை வேலூரில் உள்ள தமிழ்நாடு நுகர் பொருள் கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து இதனை பதுக்கி வைத்தவர்கள் யார் என்பது குறித்தும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் குடியாத்தம் பகுதியில் 15 டன் ரேஷன் அரிசியும், வேலூரில் 8.50 டன் ரேஷன் அரிசியும், மொத்தமாக 23. 50 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தப்பட்டுள்ளது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Views: - 30

0

0