8 வயது சிறுவன் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு

19 January 2021, 8:32 pm
Quick Share

கள்ளக்குறிச்சி: மணலூர்பேட்டை அருகே 8 வயது சிறுவன் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் குறித்து போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை அருகே உள்ள கிராமம் வடக்குதாங்கல்.இந்த கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி(45)யின் மகன் பாஸ்கரன்(8). இவர் இன்று மதியம் சுமார் 1.30 மணியளவில் தமது நண்பர்களுடன் அவர்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் குளிக்க சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் குளித்து கொண்டிருந்த சிறுவன் பாஸ்கரன்(8) திடீரென மாயமானதாக கூறப்படுகிறது. பின்னர் உடன் குளிக்க சென்ற சிறுவர்கள் கூச்சலிட அப்பகுதி மக்கள் வந்து மிட்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் சிறுவன் கிடைக்காத நிலையில் மணலூர்பேட்டை போலிசார் மற்றும் திருக்கோவிலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினருக்கு தகவல் கொடுத்தனர்.

ஆனால் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பெய்த தொடர் மழையின் காரணமாக கிணறு அதன் முழு கொள்ளளவை எட்டியதால் தீயணைப்பு வீரர்களால் சிறுவனை மீட்க முடியவில்லை. பின்னர் அருகில் இருந்தவர்கள் இராட்சத மின் போட்டார் கொண்டு நீரை வெளியேற்றி வருகின்றனர். 4 மணி நேர போராட்டத்திற்கு பின் பொதுமக்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் நீரை வெளியேற்றி சிறுவனை மீட்டனர். பின்னர் அங்கு தயார் நிலையில் இருந்த ஆப்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி சிறுவனை திருக்கோவிலூர் அரசு மருத்துவ மனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும் சிறுவன் இறப்பு குறித்து மணலூர்பேட்டை போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 0

0

0