’83’ படத்தில் ‘மாஸ்டர்’… இத நீங்க கவனிச்சீங்களா? லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வந்த மாஸ் ட்ரெய்லர்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 November 2021, 12:51 pm
83 Film -Updatenews360
Quick Share

கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 83 படத்தன் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

வரலாற்றிலேயே முதன்முறையாக உலகக்கோப்பை தொடரை இந்திய கிரிக்கெட் அணி வென்று அசத்தியது 1983ஆம் வருடத்தில்தான். இந்த வருடத்தை யாராலும் மறக்க முடியாது என்றே கூறலாம்.

அப்படி 1983ல் இந்திய அணி வீரர்கள் சந்தித்த அவமானங்களையும், அதை எப்படி வெற்றி பெற்றார்கள் என்பதை உணர்வுப்பூர்வமாக உருவாக்கியுள்ளனர் 83 படக்குழுவினர். கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி வீரர்கள் சந்தித்த சவால்களையும் வெற்றியையும் மையமாக வைத்து 83 படத்தை கபீர் கான் இயக்கியுள்ளார்.

83 (Hindi ) | Official Concept Trailer | Ranveer Singh | Kabir Khan | Movie  2021 | Fanmade - YouTube

ரன்வீர்சிங் கபில் தேவாகவும், சுனில் கவாஸ்கராக தாஹிர் ராஜ் பாசினும், ஸ்ரீகாந்த்தாக தமிழ் நடிகர் ஜீவாவும் நடித்துள்ளனர். மேலும் தீபிகா படுகோனே, பங்கஜ் திரிபாதி உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ப்ரீத்தம் இசையமைத்துள்ளார். பின்னணி அசையை ஜூலியஸ் கவனித்துள்ளார்.

முன்னதாகவே டம் வெளியாக வேண்டிய நிலையில் இருந்த போது கொரோனா தாக்கத்தால் படத்தின் தேதி தள்ளிப்போனது. இந்த நிலையில் இன்று 83 படத்தின் ட்ரெய்லர் வெளியானது. படத்தின் ட்ரெய்லரை பார்த்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் டிவிட்டரில் 83 என்ற ஹேஷ்டேக், GOOSEBUMPS என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி கொண்டாடி வருகின்றனர்.

Ranveer Singh announces the release date of '83 the film | Filmfare.com

காரணம், ரியல் கபில்தேவ் போலவே ரன்வீர் சிங் ஒவ்வொரு அசைவிலும் உயிரோட்டம் தந்துள்ளார். அதே போலவே ஸ்ரீகாந்த் சேட்டை செய்வதை தத்ரூபமாக தமிழ் நடிகர் ஜீவா அசத்தியுள்ளார். மேலும் படத்தின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் சிறு வயது கதாபாத்திரத்தை கண்முன்னே நிறுத்தியுள்ளனர்.

இந்திய வென்றவுடன் தெருவில் உள்ள அனைவரும் பட்டாசு வெடித்து கொண்டாடும் போது ஒருவர் தோளில் சச்சின் சிறுவயது பிள்ளையாக அமர்ந்து கொண்டாடுவது போல உள்ள காட்சிகள் பிரம்மிப்பை ஏற்படுத்தும். இப்படி ஒவ்வொரு காட்சிகளையும் செதுக்கி வைத்துள்ளார் இயக்குநர் கபீர்கான்.

படம் வரும் டிசம்பர் 24ஆம் தேதி வெளியாக உள்ளது. ட்ரெய்லருக்கே ரசிகர்கள் அதகளப்படுத்தி வரும் நிலையில் படம் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையோடு காத்துள்ளனர் படக்குழுவினர்.

Views: - 1076

0

0