கடத்த முயன்ற 875 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

28 February 2021, 2:53 pm
Quick Share

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் நகரில் 875 கிலோ ரேஷன் அரிசி கடத்தி சென்ற வேனை போக்குவரத்து காவல்துறையினர் மடக்கிப் பிடித்து ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

காஞ்சிபுரம், இரட்டை மண்டபம் அருகே, போக்குவரத்து காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரு வேன் வருவதை பார்த்த, போக்குவரத்து போலீசார், வேனை வழிமறித்து நிறுத்தினார். வேனில் இருந்த இருவர், வாகனத்தை நிறுத்திவிட்டு, தப்பி ஓடி விட்டனர். போலீசார் நடத்திய சோதனையில், 25 கிலோ எடை உடைய, 35 அரிசி மூட்டைகள் இருந்தது தெரிய வந்தது. போலீசார், அரிசி கடத்திய வேனை, சிவகாஞ்சி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள், 35 மூட்டைகளை பறிமுதல் செய்து, அரிசி கடத்தியவர் குறித்து விசாரிக்கின்றனர்.

Views: - 1

0

0