பெண் பயணி மீது சிறுநீர் கழித்த தொழிலதிபர்.. நடுவானில் விமானத்தில் நடந்த அட்டூழியம் : ஏர் இந்தியா குழுமத்துக்கு பறந்த கடிதம்!!

Author: Udayachandran RadhaKrishnan
6 January 2023, 1:50 pm
Air India - Updatenews360
Quick Share

ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த சக பெண் பயணி மீது ஒரு நபர் சிறுநீர் கழித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

கடந்த நவம்பர் 26ஆம் தேதி அன்று அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து டெல்லிக்கு AI 102 என்ற விமானம் வந்துள்ளது.

இந்த விமானத்தின் பிஸ்னஸ் வகுப்பு இருக்கையில் ஒரு நபர் குடிபோதையில் பயணம் செய்துள்ளார். மதிய உணவுக்குப் பின் விமானத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டு விமானம் பறந்துகொண்டிருந்தது.

அப்போது குடிபோதையில் இருந்த அந்த ஆண் பயணி, தனது பேண்ட் ஜிப்பை அவிழ்த்து, 70 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் பயணி மீது சிறுநீர் கழித்துள்ளார்.

இது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடைய வைத்தது. அத்துடன், ஒரு சக பயணி அந்த அந்த நபரை அங்கிருந்து நகரும் படி அதட்டும் வரை அப்படியே நின்று கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து விமான உதவியாளர்களிடம் பெண் புகார் அளித்துள்ளார். ஆனால், அவர்கள் ஏதும் நடவடிக்கை எடுக்கவில்லை.
பாதிக்கப்பட்ட அந்த பெண் வேறு இருக்கை கேட்டபோது, இருக்கைகாலியாக இல்லை என்று விமான ஊழியர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவங்களைப் பார்த்துக்கொண்டிருந்த மற்றொரு பயணி, எனக்கு ஆதரவு அளித்து, முதல்வகுப்பில் ஒரு இருக்கை காலியாக இருக்கிறது எனக் கூறினார்.

ஏறக்குறைய 20 நிமிடங்கள் நின்று கொண்டே பயணித்தபின், விமானஊழியர்கள் அமரும் இருக்கை அளிக்கப்பட்டது. அதில் 2 மணிநேரம் பயணித்தார்.பின்னர் என்னுடைய இருக்கைக்கு வந்து அமருமாறு விமானஊழியர்கள் கேட்டுக்கொண்டபின்பும் மறுத்த அந்த பெண், கடைசிவரை விமான ஊழியர்கள் இருக்கையில் பயணித்தார்.

சிறிது நேரத்துக்குப்பின் சிறுநீர் கழித்த அந்த ஆண்பயணியிடம் விமான ஊழியர்கள் சென்று பாதிக்கப்பட்ட பெண் பயணியிடம் மன்னிப்புக் கோரக் கோரினார்கள். ஆனால் அந்த பெண் பயணி, அந்தநபரை பார்க்கவோ, பேசவோ விருப்பம் இல்லை என்றும் விமானம் தரையிறங்கியதும் அவர் மீது புகார் அளித்து கைது செய்யப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்

ஆனால், எனது விருப்பதுக்கு மாறாக அந்த ஆண் பயணியை என் முன் நிறுத்தி மன்னிப்புக் கேட்க விமான நிறுவன ஊழியர்கள் வற்புறுத்தினர்.

என்னைப் பார்த்ததும் அந்த நபர் கண்ணீர்விட்டு அழுது, போலீஸில் புகார் அளிக்காதீர்கள், நான் ஒரு குடும்பஸ்தன், இந்த சம்பவத்தால் என் மனைவி, குழந்தைகள் பாதிக்கப்படவிரும்பவில்லை என்று தெரிவித்தார்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் ஆத்திரத்துடன் ஏர் இந்தியா குழுமத் தலைவர் சந்திரசேகரனுக்கு தனது நேர்ந்த அவலம் குறித்து கடிதம் மூலம் புகார் அளித்தார்.

சுமார் 45 நாள் கடந்த நிலையில், அந்த நபர் அடுத்த 30 நாள்கள் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ய தடை விதித்து நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பாக ஏர் இந்தியா நிர்வாகத்திடம் விமான போக்குவரத்து ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உரிய விளக்கம் கிடைத்த பின்னர் அந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து ஆணையம் உறுதி அளித்துள்ளது.

Views: - 147

0

0