தேர்தல் விதி மீறி ஊர்வலம் சென்ற தே.மு.தி.க.வினர் 63 பேர் மீது வழக்கு

1 March 2021, 10:56 pm
Quick Share

வேலூர்: சத்துவாச்சாரியில் தேர்தல் விதி மீறி ஊர்வலம் சென்ற தே.மு.தி.க.வினர் 63 பேர் மீது சத்துவாச்சாரி போலீசார் வழக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ந் தேதி நடக்கிறது. இதனையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அனுமதியின்றி பொதுக்கூட்டம் நடத்தவும், ஊர்வலம் போன்றவை நடத்தவும் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வேலூர் சத்துவாச்சாரி ரங்காபுரம் போக்குவரத்து அலுவலகம் எதிரே இருந்து தே.மு.தி.க.வினர் நேற்று வேலூர் நோக்கி ஊர்வலமாக வந்தனர்.

போலீஸ் அனுமதி இல்லாமல் தடையை மீறி ஊர்வலமாக சென்றதால் தே.மு.தி.க.வினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி வேலூர் மாவட்ட செயலாளர் கோபிநாத், பொருளாளர் ஜே.சி.பி. சுரேஷ், மாவட்ட துணை செயலாளர் சீனிவாசன் உள்பட 63 பேர் மீது சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் முதன் முறையாக தேர்தல் விதியை மீறியதாக தே.மு.தி.க.வினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 0

0

0