மேல் சாதி பெண்ணை காதல் திருணம் செய்த வாலிபர்: உறவினரை கடத்தி சென்று சிறுநீர் குடிக்க சொல்லி துன்புறுத்தியதாக புகார்…!

Author: Udhayakumar Raman
14 September 2021, 7:51 pm
Quick Share

தருமபுரி: தருமபுரி அருகே மேல் சாதி பெண்ணை காதல் திருணம் செய்து கொண்ட வாலிபரின் உறவினரை கடத்தி சென்று சிறுநீர் குடிக்க சொல்லி துன்புறுத்தியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பன்னிப்பட்டி கிராமத்தில் இருளர் இனத்தைசேர்ந்த முனிராஜ் என்பவரின் மகன் 19 வயதுடைய ரமேஷ், டிப்ளமோ படித்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த கொங்குவேளாளர் சமூகத்தை சேர்ந்த கதிரியப்பன் மகள் 21 வயதுடைய மோகனா, பி.காம் முடித்துள்ளார். இவர்கள் இருவரும் வயது வேறுபாடுயின்றி காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 10 ஆம் தேதி அன்று இருவரும் திருமணம் செய்துகொள்ள ஊரை விட்டு தலைமறைவானார்கள். இதனால் மோகனாவில் பெற்றோர் மாரண்டஅள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 12 ஆம் தேதி மோகனாவின் உறவினர்கள் சிலர் ரமேஷின் உறவினர்கள் மூன்று பேரையும் அருகே உள்ள எல்லப்பன் பாறை மாந்தோப்பிற்கு கடத்தி சென்று அடித்து உதைத்து மது குடிக்க வைத்தும்,

முகத்தில் சிறுநீர் கழித்தும், செருப்பால் அடித்துள்ளனர். இதில் ஒருவர் தப்பி ஓடி உள்ளார். அவர்களில் இருவரின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் அப்பகுதி மக்கள் வந்து மீட்டு காயமடைந்த இரண்டு பேரையும் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றனர். இது குறித்து ரமேஷின் உறவினர்கள் பாலக்கோடு காவல் துணை கண்காணிப்பாளரிடம் தாக்கியவர்கள் மீது எஸ்.சி.,எஸ்டி., வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் மேலும் தங்கள் பகுதியில் இருளர் இன மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என புகார் அளித்தனர். இந்த புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இருளர் இன வாலிபரின் உறனரை சிறுநீர் குடித்து துன்புறுத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 154

0

0