பள்ளி மாணவியை பாலியல் தொந்தரவு செய்த எலக்ட்ரீசியன் கைது…

Author: Udhayakumar Raman
7 September 2021, 3:59 pm
Quick Share

விருதுநகர்: உன் பெயரை எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டி பள்ளி மாணவியை பாலியல் தொந்தரவு செய்த எலக்ட்ரீசியன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

விருதுநகர் அருகே நடுவப் பட்டியை சேர்ந்த 11 ம் வகுப்பு மாணவி இவர் உடல்நலக்குறைவாக இருந்தது கண்டு, அவர் தாயார் விசாரணை நடத்தியதில் அப்போது அழுது கொண்டே மாணவியை பக்கத்து வீட்டை சேர்ந்த (எலக்ட்ரீசியன்) குருசாமி (35) தனது மனைவியை பிடிக்கவில்லை என்றும், மாணவியை பிடித்திருப்பதாகவும் தனது ஆசைக்கு இணங்க வேண்டும் என்று கூறியும் இணங்க மறுத்ததால் மாணவியின் பெயரை எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டி பலமுறை பாலியல் தொந்தரவு செய்ததாக விபரம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவியின் தாய் விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரிடம் புகார் அளித்தார். புகார் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் குருசாமியை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 138

0

0