சிறை காவலரை தாக்கிய கைதி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

17 May 2021, 5:54 pm
Quick Share

வேலூர்: வேலூர் மத்திய சிறையில் சிறை காவலரை தாக்கிய கைதி மீது 5 பிரிவுகளின் கீழ் பாகாயம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் தொரப்பாடியில் உள்ள வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் முதுநிலை காவலராக பணியாற்றி வரும் உமயன் என்பவரை சிறையில் ஆயுள் தண்டனை பெற்று வரும் ஆரணியை சேர்ந்த மாபாஷா என்ற கைதி தன்னை ஒரு செல்லிலிருந்து வேறு ஒரு செல்லுக்கு மாற்ற சொல்லி முதுநிலை சிறை காவலரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக சிறை அலுவலர் மோகன்குமார் பாகாயம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில், அரசு அலுவலரை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல், கைதி காவலரை தாக்குதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் பாகாயம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 107

0

0