தேங்கிய மழைநீரில் மிளகாய் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து: இருசக்கர வாகனத்தில் சென்றவர் சிக்கி உயிரிழப்பு

26 November 2020, 11:00 pm
Quick Share

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தேங்கிய மழைநீரில் மிளகாய் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் சிக்கி உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் அத்திபேடு கிராமத்தில் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை இணைப்பு சாலையில் மழைநீர் தேங்கி இருந்த பள்ளத்தில் ஆந்திரமாநிலம் குண்டூரில் இருந்து மிளகாய்லோடு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சென்னையை சேர்ந்த ராகுல் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்தபோது, அதில் சிக்கிகொண்டு மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தார். ராகுல் கும்மிடிப்பூண்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி சென்னைக்கு சென்றபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

விபத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த சோழவரம் போலீசார் கிரேன் உதவியுடன் லாரியை அப்புறப்படுத்தி அவரது உடலை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விருதுநகரை சேர்ந்த ஓட்டுனர் குப்புசாமி என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உரிய முறையில் இணைப்புச் சாலை சீரமைக்கப் படாததால் மழைநீர் வெளியேற போதிய வழி இல்லாததால் பள்ளம் ஏற்பட்டு விபத்து ஏற்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

Views: - 0

0

0