குழந்தைகளுக்கு ரத்தசோகை நோயை தடுக்க எள்ளுமிட்டாய் வழங்கும் நிகழ்ச்சி

Author: kavin kumar
3 November 2021, 3:59 pm
Quick Share

தருமபுரி: பென்னாகரத்தில் குழந்தைகளுக்கு ரத்தசோகை நோயை தடுக்க மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி இரும்புசத்துமிகுந்த எள்ளுமிட்டாய் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

தருமபுரி மாவட்டம் மலைகள் சூழ்ந்த கிராமம், இந்த மலைகிரமங்களில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகள் ஊட்டசத்துகுறைபாடு, தலைசீமியா, ரத்தசோகை குறைபாடு உள்ளிட்ட நோய்களுக்கு ஆளாகின்றனர். இந்த நோய்கள் பாதிக்காமல் இருக்க தமிழக அரசு பல்வேறு விழிப்புணர்வு மற்றும் ஊட்டசத்து உணவுகளை வழங்கி வருகிறது.அதன் அடிப்படையில் முதற்க்கட்டமாக தமிழகத்தில் அதிகமாக இம்மாதியான குறைபாடுகளை தவிற்க்கும் வகையில் திருநெல்வேலி மற்றும் தருமபுரி ஆகிய இரு மாவட்டங்களை தேர்ந்தெடுத்து ஆய்வு செய்யும் பணியில் இன்று தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரத்தில் உள்ள 177 அங்கான்வாடி மையங்களில் உள்ள 2 வயது முதல் 5 வயதிற்குட்பட்ட 3 ஆயித்து 685 குழந்தைகளுக்கு சமூக நலன் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் இரும்பு சத்தை அதிகரிக்கும் நோக்கில் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி எள்ளுமிட்டாய் வழங்கி துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இன்பசேகரன் மற்றும் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Views: - 171

0

0