இருசக்கர வாகனத்தை திருட முயன்ற வாலிபர்: காவல் ஆய்வாளர் வாகனத்தை தாக்கிவிட்டு தப்பி ஓடிய வாலிபர் கைது

21 September 2020, 8:53 pm
Quick Share

வேலூர்: வேலூரில் இருசக்கர வாகனத்தை திருட முயன்ற வாலிபரை பிடிக்கச் சென்ற காவல் ஆய்வாளர் வாகனத்தை தாக்கிவிட்டு தப்பி ஓடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் வாலிபர் ஒருவர் இருசக்கர வாகனத்தின் பூட்டை உடைக்க முயன்றபோது அங்கிருந்த பொதுமக்கள் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் உள்ள காவல் நிலையத்திற்கு புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் இருசக்கர வாகனத்தை திருட முயன்ற வாலிபர் மணிகண்டன் என்பவரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையின்போது மணிகண்டன் காவல் நிலையத்தில் இருந்த கணினி மற்றும் தொலைக்காட்சிப் பெட்டி, கடிகாரம் போன்ற பொருட்களை சேதப்படுத்தி விட்டு காவல் நிலையத்திலிருந்து தப்பி ஓட முயன்றபோது,

காவல் ஆய்வாளரின் வாகனத்தை மணிகண்டன் கையில் வைத்திருந்த கற்களால் வாகனத்தின் கண்ணாடியை சேதப்படுத்தி விட்டு, தப்ப முயன்ற போது மணிகண்டனை காவலர்கள் விரட்டிச்சென்று பிடித்தனர். பின்னர் மீண்டும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில், ஆரணி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் எனவும், இவர் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும், இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் மணிகண்டனிடம் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தினால் வேலூர் அரசு மருத்துவமனையில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 7

0

0