முதுமலையில் சிகிச்சை பெற்று வந்த காட்டு யானை உயிரிழந்தது

10 July 2021, 4:32 pm
Quick Share

நீலகிரி : கூடலூர் முதுமலையில் சிகிச்சை பெற்று வந்த ஆண் காட்டு யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

கூடலூரில் காயத்துடன் பிடிபட்ட 35 வயது மதிக்கத்தக்க காட்டு யானை முதுமலையில் உள்ள அபயாரண்யத்தில் மரக் கூண்டில் அடைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தது பிரேத பரிசோதனைக்கு பின்பு யானை இறப்பிற்கான காரணம் தெரியும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். கூடலூர் அருகே தோட்டமூலா என்னும் பகுதியில் பிற யானைகளுடன் நடந்த மோதலில் ஓர் காட்டு யானைக்கு வால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அப்பகுதியில் காயத்துடன் சுற்றித்திரிந்த காட்டு யானையை ஜீன் 17 ம் தேதி கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் பிடித்து முதுமலையிலுள்ள அபயாரண்யம் யானைகள் முகாமிற்கு கொண்டுவந்தனர். அங்கு அமைக்கப்பட்டிருந்த மரக்கூண்டில் அடைக்கப்பட்டு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் அந்த யானை திடீரென உயிரிழந்தது பிரேதப் பரிசோதனைக்குப் பின்னரே யானை இறப்பிற்கான காரணம் தெரியும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Views: - 32

0

0