5 வது மாடியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு

21 January 2021, 8:37 pm
Quick Share

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அரசு மருத்துவக் கல்லூரிக்கான கட்டுமான பணியின் போது 5வது மாடியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அரசு மருத்துவ கல்லூரிக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. 5 மாடி கட்டிடம் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. மருத்துவ கல்லூரிக்கான கட்டுமானபணியில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் அரசு மருத்துவக்கல்லூரி 5வது தளத்தில் கான்கிரீட் அமைக்கும் பணி இன்று காலை நடைபெற்று வருகிறது. அப்பொழுது தடுப்பு சுவர் அருகே நின்று கான்கிரீட் கலவையை எடுத்த போது அங்கிருந்து தவறி கீழே விழுந்து கூரைக்குண்டு பகுதியை சேர்ந்த முருகன் (45) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சூலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 0

0

0