கிணற்றில் குளிக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி பலி….
1 February 2021, 7:16 pmசெங்கல்பட்டு: ஒர்த்தி அடுத்த முருங்கை கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்ற வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து ஒர்த்தி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செங்கல்பட்டு- ஒர்த்தி அடுத்த முருகை கிராமம் J.P நகரை சேர்ந்த காசி என்பவரின் மகன் மணிகண்டன். இவர் சென்னையில் எலக்ட்ரீசியன் ஆக பணிபுரிந்து வருகிறார். விடுமுறையில் தன் சொந்த ஊருக்கு வந்த மணிகண்டன் அப்பகுதியிலுள்ள கிணற்றிற்கு குளிப்பதற்காக சென்ற பொழுது நீரில் சிக்கி உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஒர்த்தி காவல்துறையினர் நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின்பு அச்சரப்பாக்கம் மீட்புப்பணி நிலைய அலுவலர் தலைமையில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ஒர்த்தி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
0
0