வைகை ஆற்றங்கரையில் நடந்தது சென்றவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது

15 August 2020, 10:53 pm
Quick Share

மதுரை: அண்ணாநகர் பகுதியில் வைகை ஆற்றங்கரையில் நடந்தது சென்றவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் வைகை ஆற்றங்கரை விலையாக வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது பின்தொடர்ந்து வந்த அதே பகுதியை சேர்ந்த முரளி என்ற இளைஞர் கத்தியை காட்டி இவர் வைத்திருந்த 175 ரூபாயை பறித்து கொண்டு தப்பி ஓட முயன்றார். முத்துக்குமாரின் அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்ற பொதுமக்கள் சுற்றிவளைத்து அறிவுரை பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர். 175 ரூபாய்க்காக கத்திமுனையில் சாலை நடந்து சென்றவரை பட்டப்பகலில் மிரட்டிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Views: - 29

0

0