ஆனி அமாவாசை: திதி கொடுப்பதற்கு குவிந்த பொதுமக்கள்

9 July 2021, 1:57 pm
Quick Share

திருச்சி: ஆடி அமாவாசையான இன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக திருச்சி அம்மா மண்டபத்தில் பொதுமக்கள் திதி கொடுப்பத்தனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன இதன் ஒரு பகுதியாக திருச்சியில் உள்ள வழிபாட்டு தலங்களிலும் கடந்த இரண்டரை மாதங்களாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதன் ஒரு பகுதியாக திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையிலும் திதி கொடுப்பதற்கு பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது தமிழகம் முழுவதும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அம்மா மண்டபத்திலும் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று ஆனி அமாவாசை தினத்தை முன்னிட்டு தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்கு ஏராளமான பொதுமக்கள் கூடினர். வேதவிற்பனர்கள் உதவியுடன் பிண்டங்கள் வைத்து மந்திரம் உச்சரித்து காவிரி ஆற்றில் விட்டனர். பொதுமக்கள் வருகை காரணமாக இத்தனை நாட்கள் களை இழந்து காணப்பட்ட அம்மாமண்டபம் படித்துறை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது.

Views: - 117

0

0