ஜல் ஜீவன் திட்டத்தில் முறைகேடு: ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் கூட்டத்தில் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் குற்றச்சாட்டு…

7 July 2021, 5:31 pm
Quick Share

திண்டுக்கல்: ஜல் ஜீவன் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்குவதற்காக பெயரளவில் நடைபெறும் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் கூட்டம் என திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் மொத்தம் 14 ஊராட்சிகள் உள்ளடக்கிய ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 19 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் உள்ளனர். இந்நிலையில் இன்று ஊராட்சி ஒன்றிய கூட்டம் ஊராட்சி ஒன்றிய தலைவர் ராஜா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 35 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் கலந்துகொண்ட இரண்டாவது வார்டு கம்யூனிஸ்ட் உறுப்பினர் செல்வநாயகம் கையில் குடத்துடன் குடத்தில் ஜல் ஜீவன் திட்டத்தில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடைபெற்றுள்ளது. உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் பொதுமக்கள் யாருக்கும் தற்போது வரை தண்ணீர் தரப்படவில்லை, அதிகாரிகள் ஆய்வு செய்து முறைகேடு செய்த அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் ஊராட்சி ஒன்றிய கூட்டமானது பெயரளவில் மட்டும் கையெழுத்து வாங்குவதற்காக நடைபெறுவதாக உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர்.

ஒவ்வொரு பஞ்சாயத்து மற்றும் ஊராட்சிகளில் வைரஸ் தொற்று காலகட்டத்தில் பிளீச்சிங் பவுடர் வாங்கியதில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடைபெற்றுள்ளதாவும் கூறினார்கள். அதேபோல் என்ஜிஓ காலனி பகுதியில் ஆறு மாதங்களுக்கு முன்பு போடப்பட்ட கழிவுநீர் வாய்க்கால் தற்போது முழுவதும் சேதமடைந்துள்ளதாகவும், அதை ஒப்பந்தக்காரர் மற்றும் பொறியாளர்கள் இடம் கூறினார். அதைப்பற்றி அவர்கள் கண்டு கொள்ளாமல் வேலை செய்து ஆறு மாதம் ஆகிவிட்டது என்று எங்களிடம் தெரிவிக்கின்றனர். ஊராட்சி ஒன்றிய கூட்டமானது பேரளவில் நடைபெற்றாலும் ஊராட்சி ஒன்றியம் முழுவதும் ஊழல் படிந்தே உள்ளதாக ஊராட்சி மன்ற கூட்டத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கூறினர்.

செய்தியாளர்களை சந்தித்த இரண்டாவது வார்டு உறுப்பினர் செல்வநாயகம் கூறும்பொழுது, ஜல் ஜீவன் திட்டத்தில் பல கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. ஒதுக்கப்பட்ட தொகையானது ஒவ்வொரு ஊராட்சி பகுதிகளிலும் குழாய்கள் பதிக்கப்பட்டு உடனடியாக குடிநீர் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது. அதேபோல் வீடுகளில் உள்ளவர்கள் 3600 ரூபாய் ஊராட்சி அலுவலகத்தில் முன்பணம் செலுத்த வேண்டும் எனவும் அறிவித்திருந்தனர். இதில் பொதுமக்கள் ஊராட்சிகளில் தற்போது பணத்தையும் கட்டியுள்ளனர். கட்டி சுமார் ஒன்பது மாதங்களாக ஜெகஜீவன் திட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் குழாய் பாதிக்கப்பட்டு ஒப்பந்தகாரர் அவர்களுக்கு பணம் வினியோகம் செய்யப்பட்டது. ஆனால் இதுவரை எந்த பொது மக்களுக்கும் குடிநீர் வழங்கப்படவில்லை. மேலும் இவர்கள் ராட்சச குழாய் மூலம் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் கொடுக்கிறோம் என்று கூறுகின்றனர்.

அப்படி கொடுத்தால் அனைத்து பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறுகள் வற்றி விடும். ஆகவே காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் வீடுகளுக்கு குடிநீர் கொடுக்க வேண்டும் ஜார்ஜ் இடத்தில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்று உள்ளது. ஆகவே மாவட்ட நிர்வாகம் தற்போது தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள முதல்வர் அவர்களும் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும், இத்திட்டத்தில் நடைபெற்ற ஊழல்களை விசாரிக்க வேண்டும் என்றும், தற்போது ஒன்றிய அலுவலகத்தில் நடைபெறும் கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் கண்துடைப்பாக உள்ளது என்றும், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் கூறுவது மிகப் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது.

Views: - 103

0

0