கிசான் திட்டத்தில் முறைகேடு: ஒரே கிராமத்தைச் சேர்ந்த 376 பேர் தகுதியற்ற நபர்கள் கண்டுபிடிப்பு

10 September 2020, 6:38 pm
Quick Share

திருவாரூர்: கிசான் திட்டத்தில் முறைகேட்டில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரே கிராமத்தைச் சேர்ந்த 376 பேர் தகுதியற்ற நபர்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 376 தகுதியற்ற நபர்கள் பிரதமர் கிசான் திட்டத்தில் பயன் பெற்று வந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தனிநபர் ஒருவர் தகுதியற்ற நபர்களிடம் ஆயிரம் ரூபாய் வீதம் பணம் பெற்றுக் கொண்டு கிசான் திட்டத்தில் இணைத்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை திருவாரூர் மாவட்டம் முழுவதும் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்கள் அதேபோல் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2383 தகுதியற்ற நபர்கள் பிரதமர் கிசான் திட்டத்தில் பயன்பெற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ள நிலையில்,

தற்போது ஒரே கிராமத்தைச் சேர்ந்த 376 நபர்கள் முறைகேடாக பணம் பெற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தகுதியற்ற நபர்களிடமிருந்து பணத்தை திரும்ப பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆனந்த் உத்தரவின்படி வேளாண் துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இதுவரை 17.40 லட்சம் ரூபாய் பணம் தகுதியற்ற நபர்களிடமிருந்து திரும்ப பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0