இரு ஆட்டோக்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: தாய் மற்றும் மகள் பலி

5 March 2021, 9:38 pm
Quick Share

காஞ்சிபுரம்: சுங்குவார் சத்திரம் அருகிலுள்ள சோகண்டி பகுதியில் இரு ஆட்டோக்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தாயும் பள்ளி மாணவியான மகளும் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே உள்ள சோகண்டி பகுதியில் மதுரமங்கலம் செல்லும் செக்போஸ்ட் அருகே எதிரெதிரே வந்த இரு ஆட்டோக்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் ஆட்டோவில் பயணித்த கந்தூர் மேட்டு காலனி பகுதியை சேர்ந்த தாய் கண்ணகி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கண்ணகியின் மகள் ஜனனி. இவர் மதுரமங்கலம் உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். விபத்தில் ஜனனி படுகாயம் அடைந்ததால் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். முதலுதவி சிகிச்சை முடிந்த பின்னர்,

செங்கல்பட்டு அரசு மருத்துவமனை கொண்டு சென்று சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஜனனி உயிரிழந்தார். ஆட்டோ ஓட்டிவந்த திருப்பந்தியூர் கிராமத்தை சேர்ந்த டிரைவர் லட்சுமண குமார் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். அவருக்கு முதலுதவி செய்து வழக்கு பதிந்து சுங்குவார்சத்திரம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். சாலை விபத்தில் தாயும் மகளும் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 1

0

0