17 வயது சிறுமி 4 மாத கர்ப்பம்… காதலன் போக்சோ சட்டத்தில் கைது..

Author: Udayaraman
3 August 2021, 8:56 pm
Quick Share

சென்னை: புளியந்தோப்பில் 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த பெண் தனது 17 வயது மகள் புரசைவாக்கத்தில் உள்ள ஒரு துணிக் கடையில் வேலை செய்து வருவதாகவும் , கடந்த 31 ஆம் தேதி இரவு வேலைக்கு சென்றவர் இரவு 10 மணி வரை வீடு திரும்பவில்லை எனவும் கடந்த ஒன்றாம் தேதி புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் புளியந் தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். இந்நிலையில் சிறுமி புளியந்தோப்பு திரு.வி.க நகர் 6வது தெருவை சேர்ந்த தினேஷ் குமார் என்ற நபருடன் சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து சிறுமியை தினேஷ் குமாருடன் புளியந்தோப்பில் உள்ள ஒரு வீட்டில் வைத்து போலீசார் மீட்டனர்.விசாரணையில் சிறுமி தினேஷ் குமார் என்பவரை காதலித்து வந்ததாகவும் இருவரும் இரண்டு தினங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு அவரது உறவினர் வீட்டில் தங்கி இருந்ததாகவும் சிறுமி தற்போது 4 மாத கர்ப்பமாக உள்ளதாகவும் விசாரணை யில் தெரிய வந்தது. இதனையடுத்து புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தினேஷ்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Views: - 99

0

0