விதியை மீறி திறக்கப்பட்ட பாலிடெக்னிக் கல்லூரி மீது நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவிப்பு…

7 September 2020, 9:34 pm
Quick Share

வேலூர்: குடியாத்தம் அருகே அரசின் விதியை மீறி திறக்கப்பட்ட பாலிடெக்னிக் கல்லூரி மீது கட்டாயம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே வேப்பூர் கிராமத்தில் குருராகவேந்திரா பாலிடெக்னிக் என்ற தனியார் கல்லூரி உள்ளது. இதில் தமிழக அரசு இன்று எல்லா பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கபடும் என அறிவித்து பேருந்துகள் இயக்கப்படுவதால், தனது கல்லூரியில் படிக்கும் பாலிடெக்னிக் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் கல்லூரி சீருடையுடன் கல்லூரிக்கு வரவேண்டுமென கல்லூரிக்கு வரவழைத்துள்ளனர். தமிழக அரசு கொரோனா பாதிப்புள்ளதால் பள்ளி கல்லூரிகள் எதனையும் இப்போது திறக்க கூடாது என அரசே உத்தரவிட்டு அனைத்தும் மூடப்பட்டு ஆன் லைன் மூலம் வகுப்புகள் நடந்து வருகிறது.

ஆனால் அரசின் உத்தரவையும் மதிக்காமல் இந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களை கட்டாயப்படுத்தி கல்லூரிக்கு அழைத்துள்ளது. இதில் மாணவ, மாணவிகள் முகக்கவசம் அணியாமலும் கல்லூரிக்கு செல்கின்றனர். இதன் மூலம் கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் இந்த கல்லூரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோருகின்றனர்.

இந்த நிலையில் மாநிலத்திலேயே எந்த கல்லூரியும் திறக்காத நிலையில் வேலூர் மாவட்டத்தில் விதியை மீறி மாணவர்களை கட்டாயப்படுத்தி கல்லூரிக்கு வரவழைத்தது குறித்து ஆட்சியர் சண்முகசுந்தரம் கூறுகையில், விதியை மீறி கல்லூரிகள் திறக்க கூடாது, அவ்வாறு திறக்கப்பட்டால் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், பேருந்துகள் இயக்கப்படுவது பொதுமக்கள் வியாபாரிகள் பாதிக்க கூடாது என்பதற்காக தான். ஆனால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பள்ளி கல்லூரிகளை திறப்பது சரியில்லை, அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று அவர் கூறினார்.

Views: - 0

0

0