புதுச்சேரியில் 2 ஆயிரம் படுக்கைகள் ஏற்படுத்த நடவடிக்கை… முதலமைச்சர் நாராயணசாமி தகவல்…

6 August 2020, 9:38 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரிப்பதால் 2 ஆயிரம் படுக்கைகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இன்று வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- புதுச்சேரி நகர மற்றும் கிராம பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக நேற்று 946 பேருக்கு உமிழ் நீர் எடுத்து பரிசோதனை செய்ததில் 195 பேருக்கு தூக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் நோய்த்தொற்று அதிகரித்து வருவதால் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் பரிசோதனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பொது மக்களுக்கு மருத்துவ வசதிகளை தரக்கூடிய வகையில் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் 2,000 படுக்கைகளை ஏற்படுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் கடந்த வாரம் அமைச்சர் கந்தசாமியின் தாயாருக்கு தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து அவர்களது குடும்பத்தினருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் நேற்று அமைச்சர் கந்தசாமி, மற்றும் அவரது இளையமகனுக்கு தொற்று ஏற்பட்டு ஜிப்பமரில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.

அவர்கள் தற்போது நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் மத்திய அரசு சார்பாக வசூலிக்கப்படும் வரி வருவாயில் 41% வழங்க வேண்டும். இந்த ஆண்டு குறிப்பாக 2, 900 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்க வேண்டும். ஆனால் 1, 700 கோடி ரூபாய் தான் வழங்கியுள்ளது மீதமுள்ள தொகையை வழங்க வலியுறுத்தி நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்துள்ளார்.