நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாள் : நலத்திட்ட பணிகளில் இறங்கிய மநீம!!

7 November 2020, 1:37 pm
Kamal Bday Spl - Updatenews360
Quick Share

நீலகிரி : நடிகரும் மக்கள் நீதி மைய தலைவருமான கமல்ஹாசன் பிறந்தநாளையொட்டி நீலகிரி மாவட்ட மக்கள் நீதி மையம் சார்பில் ரத்த தான முகாம், மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

இன்று நடிகர் மற்றும் மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் மற்றும் கட்சியினர் பல்வேறு நலத்திட்ட பணிகள் மட்டுமல்லாமல் சமூகப் பணிகளையும் செய்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் உதகையில் மக்கள் நீதி மைய தலைமை அலுவலகத்தில் ரத்த தான முகாம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சியும், தொடர்ந்து விழிப்புணர்வு கொண்ட மக்கள் நீதி மய்ய கட்சியின் ஒளிப்பதிவு பாடல் வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட செயலாளர் டாக்டர் சுரேஷ் பாபு, சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட முன்னாள் அரிமா ஆளுநர் மோதிலால் கட்டாரியா , வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் ஜெ சிவகுமார், இணை செயலாளர் ஆர் தினேஷ், நகர செயலாளர் லாஜித், இளைஞர் அணி நகர செயலாளர் முஸ்தபா , மாநில விவசாய அணி இணைச் செயலாளர் சுசில் கட்டாரியா, மகளிர் அணி நகர செயலாளர் ராஜேஸ்வரி ,மற்றும் ஐடி விங் மாவட்ட செயலாளர் ஜாகிர் ஹாசன், உட்பட மக்கள் நீதி மைய கட்சியின் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

Views: - 21

0

0