வில்லன் நடிகருக்கு விஷம் கொடுத்து குழி தோண்டி புதைத்த அண்ணன் – பரபரப்பு பேட்டி!

Author: Shree
14 March 2023, 11:05 am
kabali dp

kabali dp

Quick Share

90ஸ் காலகட்டத்தில் தமிழ் திரைப்படங்களின் வில்லன் நடிகராக பெரும் அளவில் பிரபலமானவர் நடிகர் “கபாலி” எனும் பொன்னம்பலம். இவர் மைக்கேல் மதன காமராஜன் என்ற படத்தில் நடிக்க துவங்கி செந்தூரப் பாண்டி, நாட்டாமை, கூலி, அருணாச்சலம் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.

மேலும், சண்டை பயிற்சியாளாகவும் இருந்துள்ளார். இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். இந்நிலையில் தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அதிர்ச்சி பேட்டி கொடுத்துள்ளார்.

அதாவது, என் அப்பாவுக்கு மொத்தம் நான்கு மனைவிகள், அதில் மூன்றாவது மனைவியின் மகன் என் சொந்த அண்ணன் என்னுடைய மேனேஜராக பணிபுரிந்தார். அவரை அண்ணன் என்ற முறையில் நான் பெரிதாக நம்பினேன்.

ஆனால், அவர் எனக்கு வில்லனாக இருந்துள்ளார். ஆம், எனக்கு உணவில் ஸ்லோ பாய்சன் கலந்து கொடுத்து என்னை கொஞ்சம் கொஞ்சமாக கொள்ள முயற்சித்துள்ளார். அதுமட்டும் அல்லாமல் என் வீட்டுப் பின்புறம் குழிதோண்டி அதில் என்னை வைத்து பில்லி சூனியம் செய்த என்னுடைய லுங்கி, என்னுடைய பொம்மை மற்றும் சில ஊமத்தை காய்கள் எல்லாம் போட்டு புதைத்துள்ளார்.

அதாவது, என்னை சாகடித்து குழி தோன்றி புதைப்பது போல உயிரோடு இருக்கும் போதே எனக்கு சூனியம் வைத்தார். அதனால் தான் நான் இப்போது கிட்னி கோளாறு காரணமாக சிகிச்சை சிகிச்சை எடுத்து தொடர்ந்து உடல் நலம் குன்றி வருகிறேன் என கூறி வருத்தப்பட்டார்.

Views: - 276

0

1