கூடுதலாக 347 ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்கும் பணி மெத்தனம்: சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

13 May 2021, 6:56 pm
Quick Share

காஞ்சிபுரம்: தினந்தோறும் கொரோனா நோயாளிகள் அதிகரித்து வரும் நிலையில் கூடுதலாக 347 ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்கும் பணி மெத்தனம் என சமூக ஆர்வலர்கள் குற்றசாட்டியுள்ளனார்.

காஞ்சிபுரத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் நாளுக்கு நாள் கொரோனா நோய் தொற்று காரணமாக நோயாளிகள் தினம்தோறும் அதிகரித்து வருவதால் படுக்கை வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியம் கட்டிடத்தில் 347 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் அமைக்கப்பட உள்ளது.

இந்த கட்டிடம் கடந்த வாரம் பயன்பாட்டிற்கு வரும் என்ற நிலையில் முழுமையாக கட்டி முடிக்கப்படாததால் ஆக்ஸிஜன் படுக்கை இன்றி நோயாளிகள் மிகுந்த அவதி. அந்தக் கட்டிடத்தின் பணி முடித்தவுடன் மக்கள் நல்வாழ்வு அமைச்சகத்தின் அனுமதி பெறப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக கடந்த வாரம் ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் கூறிய நிலையில் அதற்கான பணி மெத்தனமாக நடைபெற்று வருகிறது என பெயர் கூற விரும்பாத அரசு மருத்துவர் புலம்பினார்.

மேலும் தற்பொழுது பயன்பாட்டில் உள்ள ஆக்சிசன் படுக்கை 6KL திரவ ஆக்சிஜன் பயன்பாட்டில் இருந்து வருகிறது. மேலும் புதியதாக கட்டிடத்திற்கு ஆக்சிஜன் படுக்கை அதிகரித்தால் கூடுதலாக 10KL திரவ ஆக்சிஜன் தேவைப்படும் என்பதால் அதனை அமைக்க அனைத்து நடவடிக்கைகளும் துரிதமாக எடுக்க வேண்டும் என சமுக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். நேற்று வரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் 46,410 நபர்கள் தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். 41,062 நபர்கள் தொற்றால் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர், 4, 682 நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 666 நபர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்கள்.

Views: - 33

0

0