இன்று துவங்கியது பிளஸ் 1 வகுப்பு சேர்க்கை: பெற்றோருடன் பள்ளியில் திரண்ட மாணவர்கள்

14 June 2021, 2:56 pm
Quick Share

திருச்சி: அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திருச்சியில் பிளஸ்-1 வகுப்பு மாணவர்களுக்கான சேர்க்கை இன்று தொடங்கியது.

தமிழகத்தில் கொரோனா 2வது பரவலை தடுக்கும் வகையில் பள்ளி, கல்லூரிகள் அனைத்திற்கும் காலவரையின்றி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளது.இதனிடையே தமிழக அரசு பாடப்புத்தக விநியோகம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான அனைத்து பாடப்புத்தகங்களும்
அச்சடித்து தயார் நிலையில் உள்ளது. அரசு பள்ளிகளுக்கு 6 கோடி இலவச பாடப்புத்தங்கள் அனுப்பப்பட்டு உள்ளது என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஏற்கனவே பள்ளிக் கல்வித்துறை மாவட்ட முதன்மை கல்வி அலுவர்கள் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள அறிக்கையில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளியில் பணி புரியும் மற்ற ஊழியர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து மாணவர் சேர்கை பணிகள், மதிப்பெண்கள் வழங்குதல் மற்றும் பாடப்புத்தகங்களை மாணவர்களுக்கு விநியோகித்தல் போன்ற பல்வேறு பணிகள் இன்று முதல் தொடங்குகிறது.
கடந்த ஆண்டு கொரோனா நோய் தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன.

இந்நிலையில் கல்வியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் சங்கத்தினரிடத்தில் மேற்கொண்ட கலந்த்தாய்வின் முடிவுபடி இம்மாதம் முதல்+1 மாணவர்கள் சேர்கை போன்ற காரணமாக பள்ளிகள் திறக்கப்படும் எனத் தெரிவித்தை தொடர்ந்து இன்று திருச்சி உள்ள பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை துவங்கியது. ஏராளமான மாணவ மாணவிகள் தங்கள் பெற்றோருடன் பள்ளிகளுக்கு வந்து தங்களுக்கு விரும்பிய பிரிவை தேர்வு செய்து அதற்கான விண்ணப்பத்தை கொடுத்தனர்.

Views: - 66

0

0