எலியை பிடிக்க பயன்படுத்தும் பேஸ்ட்யை சாப்பிட்டு வாலிபர் தற்கொலை

Author: kavin kumar
13 October 2021, 5:35 pm
Quick Share

திருச்சி: திருச்சியில் எலியை பிடிக்க பயன்படுத்தும் பேஸ்ட்யை சாப்பிட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் பகுதியை சேர்ந்த முகமதுஅலிஜின்னா இவரது மகன் சேட் முகமது(27). ஐடிஐ முடித்து சிங்கப்பூரில் பணிபுரிந்து வந்தார். கடந்த 6மாதத்துக்கு முன்பு திருச்சிக்கு திரும்பினார்.இவர் சிறுநீரக சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டு அவதியுற்று வந்தார். நோய் பாதித்த காரணமாக மன உளைச்சலில் இருந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் எலியை பிடிக்க பயன்படுத்தும் பேஸ்ட் மற்றும் தூக்க மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.இதனை அறிந்த குடும்பத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து எடமலைப்பட்டிபுதூர் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 202

0

0