ரயில்வே மேம்பாலப் பணிகள் திடீர் நிறுத்தம் குறித்து ஆலோசனை

27 January 2021, 6:34 pm
Quick Share

வேலூர்: காட்பாடியில் இன்று தொடங்க இருந்த ரயில்வே மேம்பாலப் பணிகள் திடீர் நிறுத்தம், போக்குவரத்து மாற்றம் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

காட்பாடி சித்தூர் சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலம் பழுதடைந்து காணப்படுகிறது இதனால் பாலத்தில் கனரக வாகனங்கள் செல்லும்போது அதிர்வுகள் ஏற்படுவதுடன் இணைப்புகளில் விரிசல் அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர் மேலும் குண்டும் குழியுமாக உள்ள பாலத்தை கடந்து செல்ல வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.

எனவே ரயில்வே மேம்பாலத்தை தற்காலிகமாக சீரமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது இதற்கிடையில் காட்பாடி ரயில்வே மேம்பால சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்துள்ளது அதன்படி மேம்பாலத்தின் இணைப்புகளை சீரமைக்கும் பணியை இன்று தொடங்க திட்டமிட்டிருந்தனர் இந்த பணிகள் ஒரு வாரம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது சீரமைப்பு பணிகள் நடைபெறும் நேரத்தில் போக்குவரத்தை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி பாலத்தின் சீரமைப்பு பணிகள் நடைபெறும் நேரத்தில் 7.5 மீட்டர் அகலம் கொண்ட சாலையில் 3.5 மீட்டர் அகலத்திற்கு கனரக வாகனங்களை தவிர்த்து ஆம்புலன்ஸ் ஆட்டோ இருசக்கர வாகனங்களை மட்டும் போக்குவரத்திற்கு அனுமதிப்பது தொடர்பாக இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் போக்குவரத்து மாற்றம் குறித்து ஆலோசனை செய்தனர். இந்த கூட்டத்தில் போக்குவரத்து போலீசார், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், வருவாய் துறையினர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர். விரைவில் பாலம் பணிகள் தொடங்கும் தேதி மற்றும் போக்குவரத்து மாற்றம் குறித்து முடிவு செய்து அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Views: - 0

0

0