குவாரியில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு காப்பீடு செய்ய அறிவுரை: கல்குவாரி உரிமையாளர்களுடன் ஆட்சியர் ஆலோசனை

6 July 2021, 1:57 pm
Quick Share

காஞ்சிபுரம்: குவாரியில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் அனைவருக்கும் காப்பீடு பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி கல்குவாரி உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

காஞ்சிபுரம் மாவட்ட குறை தீர்வு வளாகத்தில் கல்குவாரி உரிமையாளர்களை அழைத்து மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி ஆலோசனை செய்தார். பின்னர் குவாரி குத்தகைதாரர்கள் குவாரி பணியின்போது அரசு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் அனைத்தையும் முறையாக பின்பற்ற வேண்டும், மேலும் பாதுகாப்பான முறையில் குவாரி பணி மேற்கொள்ள வேண்டும், கல்குவாரியில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவருக்கும் தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு மற்றும் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்ய வேண்டும், குறிப்பாக குவாரிகளில் வெடிபொருட்கள் உபயோகிக்கும் முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு கால்நடைகள் மற்றும் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பினை உறுதி செய்த பின்,

வெடி பொருட்களை பயன்படுத்த வேண்டும், குவாரிகளில் இருந்து கனிமங்களை கொண்டு செல்லும்போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படா வண்ணம் கிராம சாலையில் நீர் தெளித்துப் புழுதி பறக்காவண்ணம் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், மேலும் குவாரிகளில் இருந்து செல்லும் வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட வாகனத்தின் கொள்ளளவு உயரத்திற்கு மட்டுமே கனிமங்கள் கொண்டுசெல்ல வேண்டும் , வாகனத்தின் மேற்கூரை மூடியவாறு கொண்டுசெல்ல வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி கல் குவாரி உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

Views: - 45

0

0