வழக்கறிஞர்கள் சார்பில் சட்ட விழிப்புணர்வு மிதிவண்டி பேரணி

27 November 2020, 4:45 pm
Quick Share

கன்னியாகுமரி: குமரி வழக்கறிஞர்கள் சார்பில் தேசிய அரசியலமைப்பு நாளை முன்னிட்டு சட்ட விழிப்புணர்வு மிதிவண்டி பேரணி நடைபெற்றது.

இந்தியாவின் சட்டதிட்டங்களை இயற்றியவர் டாக்டர் அம்பேத்கர் .அவர் உருவாக்கிய இந்த அரசியலமைப்பு சட்டங்கள் தான் இன்றளவும் இந்தியாவில் நீதியை நிலைநாட்டி வருகிறது.தேசிய அரசியலமைப்பு நாளான நவம்பர் 26ஆம் தியதியை சட்ட விழிப்புணர்வு நாளாக வருடந்தோறும் நாடுமுழுவதும் வழக்கறிஞர்கள்,இளைஞர் மன்றங்கள் கொண்டாடி வருகின்றனர். 71வது தேசிய அரசியலைமைப்பு நாளையொட்டி குமரி மாவட்ட வழக்கறிஞர்கள் பொதுமக்களுக்கு சட்டவிழிப்புணர்வு ஏற்படுத்த வினோத வழியை கையாண்டனர்.

அதையொட்டி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில், குழித்துறை, பத்மநாபபுரம், இரணியல், பூதபாண்டி உள்ளிட்ட நீதிமன்றத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் ஒன்றிணைந்து குழித்துறை நீதிமன்றம் முதல் நாகர்கோவில் நீதிமன்றம் வரை மிதிவண்டி பேரணியில் ஈடுபட்டு பொதுமக்கள் கூடும் சந்திப்புகள் தோறும் சட்ட விழிப்புணர்வு பிரசாரங்களிலும் ஈடுபட்டனர். இந்த மிதிவண்டி பேரணியை மாவட்ட வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு தலைவர் மரியஸ்டீபன் தலைமையில் குழித்துறை வழக்கறிஞர் சங்க தலைவர் சுரேஷ் கொடியசைத்து துவக்கி வைத்தனர் இந்த பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

Views: - 0

0

0