மீண்டும் வழக்கம் போல மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

1 February 2021, 3:33 pm
Quick Share

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் 11 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் மீண்டும் வழக்கம் போல மக்கள் குறைதீர் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.

திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் வாரம்தோறும் திங்கள்கிழமை மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெறும். பொதுமக்கள் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளிப்பார்கள் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மக்கள் நேரடியாக பங்கேற்கும் குறைதீர் நாள் கூட்டங்கள் நடத்தப்படவில்லை. கடந்த நவம்பர் மாதம் முதல் காணொலி காட்சி மூலம் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வந்தது. மக்கள் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் மனு அளித்துவிட்டு, அங்கிருந்து காணொலி காட்சி மூலம் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் குறைகளைத் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இன்று முதல் மீண்டும் பழையபடி மக்கள் நேரடியாக மனுக்களை அளிக்கும் வகையில் வழக்கமான குறைதீர் நாள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமையில் இன்று நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தை சேர்ந்து 100 க்கு மேற்பட்ட பொதுமக்கள் தங்களுடைய மனுக்களை மாவட்ட ஆட்சியர் சிவராசுவிடம் வாழங்கினர். மனு அளித்த வந்த பொதுமக்களுக்கு கையில் சானிடைசர், தெளித்தும் சோதனைக்கு பின்னர் அனுமதித்தனர். மக்கள் குறை தீர் கூட்டத்தில் சட்டப்படிப்பு முடித்த மாற்றுதிறனாளிகளுக்கு சட்டப்புத்தகம் வாங்கவும் மற்றும் வழக்கறிஞர் சங்கத்தில் பதிவு செய்ய தலா பத்தாயிரம் வீதம் 4நபர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

Views: - 0

0

0