வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

Author: Udhayakumar Raman
27 March 2021, 1:58 pm
Quick Share

வேலூர்: காட்பாடி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ராமு உழவர் சந்தையில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் வேலூர் மத்திய கூட்டுறவு வங்கி தலைவராக உள்ள காட்பாடி V.ராமு முதன் முறையாக காட்பாடி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக களமிறங்குகிறார். ஏற்கெனவே அதிமுக வேலூர் மாவட்ட செயலாளராக இருந்து காட்பாடி மக்களிடையேயும் அனைவரிடமும் நல்ல பரிச்சயமுள்ள இவர் இன்று காலை வாக்குகளை சேகரித்த இவர், காட்பாடி உழவர் சந்தையில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து அவர்களிடம் இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்று வாக்குகளை சேகரித்தார்.

பொது மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருக்கின்ற காட்பாடி ரயில்வே மேம்பாலம் அகலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும், எப்பொழுதும் ஏற்படுகின்ற போக்குவரத்து நெரிசல் குறைய வேண்டும் என்றால் இதை எங்களுக்கு உடனடியாக நிறைவேற்றி தாருங்கள் என்று கேட்ட பொது மக்களுக்கு என்னை வெற்றி பெறச் செய்தால் முதல் வேலையாக இதை நிறைவேற்றுவேன் என்று உறுதியளித்தார். அவருடன் வேலூர் மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் வாக்குகளை சேகரித்தனர்.

Views: - 53

0

0