அதிமுக முன்னாள் அமைச்சர் காலமானார்!! சோகத்தில் அதிமுக தொண்டர்கள்.!

4 July 2021, 1:51 pm
Quick Share

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் அய்யாறு வாண்டையார் காலமானார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் அய்யாறு வாண்டையார் காலமானார். அவருக்கு வயது 90.காங்கிரஸ் கட்சியில் முக்கியப் பிரமுகராக இருந்த இவர் 1984ஆம் ஆண்டு தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து காங்கிரஸிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த இவர் 2001ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திருவையாறு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து, 21 நாட்கள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.

உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அய்யாறு வாண்டையார், இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.மறைந்த அய்யாறு வாண்டையார் உடல் சென்னையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சையில் உள்ள பூண்டி கிராமத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அய்யாறு வாண்டையாரின் மறைவுக்கு அதிமுகவினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இவர் கடந்த மே மாதம் உடல் நலக்குறைவால் மறைந்த முன்னாள் மக்களவை உறுப்பினர் கி. துளசிஅய்யா வாண்டையாரின் இளைய சகோதரர். கடந்த 2013 ஆம் ஆண்டு வாண்டையார் மனைவி ஆனந்த வள்ளியம்மாள் காலமானார்.

Views: - 68

0

0