புதுச்சேரியில் அமைக்கப்பட்ட தடுப்புகளை அகற்றிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர்

30 August 2020, 4:34 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்காமல் அப்பகுதியை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்தற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் அங்கு அமைக்கப்பட்ட தடுப்புகளை அகற்றினார்.

புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 32 பகுதிகளில் முழுமையான ஊரடங்கு அமுல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக பாதிப்பு அதிகம் உள்ள பகுதியில் இருந்து பொதுமக்கள் உள்ளேயும், வெளியேயும் செல்ல தடை செய்யும் வகையில் அரசு சார்பில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா பாதித்த மக்களுக்கு தேவையான எந்த ஒரு நிவாரணமும் வழங்காமல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஊரடங்கு அமுல்படுத்த கூடாது என வலியுறுத்தி இரு தினங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிமுக சட்டமன்ற கொறடா வையாபுரிமணிகண்டன் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனையடுத்து இது குறித்து அரசிடம் பேசி உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்ததை தொடர்ந்து அவர் போராட்டத்தை கைவிட்டார். இதனிடையை இன்று கொரோனா பாதிப்பு அதிமுள்ள முத்தியால்பேட்டை பகுதியை கட்டுப்பட்டுப்படுத்த பகுதியை அறிவித்து அப்பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வையாபுரிமணிகண்டன் அரசு பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வித நிவாரணமும் வழங்காமல் தடுப்புகளை அமைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறி அங்கு அமைக்கப்பட்ட தடுப்புகளை அகற்றினார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10000 நிவாரண நிதி வழங்க வேண்டும், தடுப்புகளை அமைத்து அப்குதியை தனிமைபடுத்துவதற்கு முன்பு அவர்களுக்கு தேவையான உணவு பொருட்களை வழங்கிய பிறகு தான் அரசு தடுப்புகளை அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Views: - 7

0

0